Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’முன்னாள்’ சூப்பர் ஸ்டார்ன்னு எப்படி சொல்லலாம்? பத்திரிக்கையாளர் வீட்டில் ரஜினி ரசிகர்கள் வாக்குவாதம்!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (09:06 IST)
நடிகர் ரஜினிகாந்த் குறித்து சினிமா பத்திரிக்கையாளர் பேசிய விதம் குறித்து அதிருப்தி அடைந்த ரஜினி ரசிகர்கள் பத்திரிக்கையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா குறித்த செய்திகளை யூட்யூப் சேனல் மூலமாக பேசி வருபவர் சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி. சமீபத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்றில் ரஜினியை ‘முன்னாள்’ சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ரஜினி ரசிகர்கள் பத்திரிக்கையாளரின் வீட்டுக்கே சென்று வாக்குவாதம் செய்துள்ளனர்.

அங்கு அவர்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை, அவர் தனது கருத்தை திரும்ப பெறுவதாக வீடியோ ஒன்றை வெளியிட வேண்டும் என ரஜினி ரசிகர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது வீட்டிற்கே சென்று வாக்குவாதம் செய்ததை சக பத்திரிக்கையாளர்கள் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments