Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் அரசியல் பயணமா? ரசிகர்களை சந்திக்கும் ரஜினி!! – சத்தியநாராயண ராவ் தகவல்!

Advertiesment
மீண்டும் அரசியல் பயணமா? ரசிகர்களை சந்திக்கும் ரஜினி!! – சத்தியநாராயண ராவ் தகவல்!
, ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (15:04 IST)
தற்போது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். கடந்த பல ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் பயணம் குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகள் முன்னதாக தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிகாந்த அறிவித்திருந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்த நடிகர் ரஜினிகாந்த் பின்னர் உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது முடிவை கைவிடுவதாக அறிவித்தார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த ஆளுனர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பேசிய ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் “ரஜினி மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இறைவன் கையில்தான் உள்ளது. ரஜினி மற்றும் ஆளுனர் ஆர்.என்.ரவி சந்திப்பு அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் நடந்தது.

ரஜினிகாந்த் தனது படப்பிடிப்பு முடிந்த பிறகு ரசிகர்களை நேரில் சந்திக்க உள்ளார். அது ஏப்ரலில் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டீசரில் கூட காட்டாத மதுராந்தக தேவர் கேரக்டர்! – லைகா வெளியிட்ட போஸ்டர்!