Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்முட்டி - ராஜ்கிரண் கூட்டணியில் "குபேரன்"!

Webdunia
சனி, 2 நவம்பர் 2019 (13:40 IST)
மலையாள நடிகர் மம்முட்டியுடன் நடிகர் ராஜ்கிரண் இணைந்து "குபேரன்" என்ற புது படத்தில் நடிக்கவுள்ளனர். தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகை மீனா கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் மூலம் ராஜ்கிரண் மலையாள திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைத்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகில் அதிகரித்துள்ளது.  ஜோபி ஜார்ஜ் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் சுமார் 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரணும் மீனாவும் இணைந்து நடிக்கிறார்கள்.  2.O படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்த பிரபல காமெடி நடிகர் கலாபவன் ஷாஜன் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க, முக்கிய வேடத்தில் நடிகர் சித்திக் நடித்துள்ளார்.
 
பிரபல மலையாள இயக்குனர் அஜய் வாசுதேவ் இயக்குகிறார். இவர்  ஏற்கனவே மம்முட்டியை வைத்து மலையாளத்தில் ராஜாதி ராஜா மற்றும் மாஸ்டர் பீஸ் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர்.  இயக்குனர் அஜய் வாசுதேவ்.. மம்முட்டியுடன் மூன்றாவதாக இணையும் முதல் இயக்குனர் இவரே.மலையாளத்தில் இந்தப்படத்திற்கு ஷைலாக்(Shylock) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கதையை புதியவர்களான பிபின் மோகன் மற்றும் அனீஸ் ஹமீது ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். ரணதீவ் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் கோபிசுந்தர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.. இவர் ஏற்கனவே தமிழில் தோழா, பெங்களூரு நாட்கள் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பாடல்களை ராஜ்கிரண், விவேகா எழுதியுள்ளனர்.  பல படங்களை ராஜ்கிரண் அவர்கள்  இயக்கி இருந்தாலும் பாடல் எழுதுவது இதுவே முதன் முறை.இந்த படத்தின் தமிழ் உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ள இந்த படம் வரும் டிசம்பரில்  ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments