Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 21 February 2025
webdunia

இந்த மரத்தை வளர்ப்பதால் லட்சுமி தேவியின் அருளை பெறலாம்...!

Advertiesment
இந்த மரத்தை வளர்ப்பதால் லட்சுமி தேவியின் அருளை பெறலாம்...!
தேவர்களின் செல்வத்திற்கு அதிபதி குபேரன் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட குபேரனுக்கே வறுமை ஏற்பட்டபோது அவர்  மீண்டும் பணக்காரனாக செய்த பரிகாரம் என்னவென்று பார்ப்போம்.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டு அதில் நாடு நகரங்கள் அனைத்தையும் இழந்த குபேரன், சிவபெருமான் சொன்னதினால் நெல்லி மரங்களை வளர்த்தான் நெல்லி மரம் பூ பூத்து, பூவெல்லாம் காய் ஆகின, காய்களெல்லாம் பழம் ஆனது. குபேரனை  எதிர்த்த அரசன் கூட ஓடி வந்து கப்பம் கட்டினான் செல்வம் பெருகியது. நாடு நகரமெல்லாம் திரும்ப கிடைத்தது.
webdunia
சிவபெருமானிடம் சென்றான் குபேரன், எனக்கு ஒன்றும் புரியவில்லை நெல்லி மரம் வளர நானும் உயர்ந்தேன் இது என்ன விந்தை என்று கேட்க! சிவபெருமான் சொன்னார் நீ வைத்தது மரங்கள் அல்ல. லட்சுமி தேவிகள் தினமும் தண்ணீர் ஊற்றி லட்சுமி தேவியின் அருள்  பெற்றாய் அதோடு நீ செய்த பாவங்களும் தீர்ந்தது.
 
நெல்லி மரம் லட்சுமி தேவியின் சொரூபம் என்றார், ஆகவேதான் லட்சுமி தேவியின் அருள் பெற்றாய் நீ என்றார் இதை கேட்ட குபேரனும்  நெல்லி மரத்தை வணங்கி விடைபெற்றார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவன் கோவிலில் எப்படி வழிபடவேண்டும் தெரியுமா...?