Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தரமணி படத்தை பாராட்டி தள்ளிய ரஜினிகாந்த்....

தரமணி படத்தை பாராட்டி தள்ளிய ரஜினிகாந்த்....
, புதன், 16 ஆகஸ்ட் 2017 (18:51 IST)
தரமணி படத்தை பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.


 

 
இயக்குனர் ராம் இயக்கியுள்ள இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. மேலும், விமர்சன ரீதியாகவும் நல்ல படம் என்ற பெயரை பெற்றுள்ளது.
 
இதில் நடிகை ஆண்டிரியா, அஞ்சலி நடித்துள்ளனர். ஹீரோவாக புதுமுகம் வசந்த் ரவி நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், படத்தின் தயாரிப்பாளரான ஜே.சதீஷ் குமாரை தொலைபேசியில் அழைத்து பாராட்டினாராம்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சதிஷ் குமார் “ ரஜினியிடமிருந்து அழைப்பு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆச்சர்யத்தில் உறைந்து போனேன். தரமணி ஒரு துணிச்சலான படம் என கூறியதோடு, படத்தின் அனைத்து அம்சங்கள் பற்றியும் விரிவாக பாராட்டினார். அதேபோல், படத்தின் வணிக வெற்றியை பற்றியும் ஆர்வமாக விசாரித்தார். அவர் போன்ற ஜாம்பவான்களிடமிருந்து பாராட்டு பெறுவது எனக்கும், எனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஊக்கமாக அமைந்துள்ளது” எனக் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருவழியா பாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் பிரபாஸ்