ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் த.செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிக்கவுள்ளது.
இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், விக்ரம், மாமன்னன் ஆகிய படங்களை தொடர்ந்து, பஹத் பாசில், மஞ்சு வாரியர், நானி மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
மேலும், தெலுங்கு நடிகர் ஷர்வானந்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள 170 வது படத்தின் ஷூட்டிங் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
ஜெயிலர் படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.