Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் ''ஜெயிலர்'' பட டிக்கெட் விற்பனையில் சாதனை

jailer
, திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (20:33 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர், ஜெயிலர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார்,  ஜாக்கிஷெராப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சிறப்பாக  நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

நாளுக்கு நாள் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ரஜினியுடன், மோகன் அமர்ந்திருப்பது போன்ற  புதிய போஸ்டரை ஜெயிலர் படக்குழு வெளியிட்ட நாளில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஜெயிலர் படத்தின் 4 வது சிங்கிலான  ரத்தமாரே என்ற பாடலை  சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில்,  ரஜினியின் ஜெயிலர் படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டி ரசிகர்கள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும்  ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சம் டிக்கெட்டுகள் ''புக் மை ஷோ''வில் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதனால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவிற்கு போறீங்களா, அங்க துண்டு போட்டாச்சா?-பிரபல நடிகர்