Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 படத்தின் ஆடியோ வெளியீட்டில் சூப்பர் ஸ்டார்?... ரசிகர்களுக்கு குஷி செய்தி!

vinoth
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (07:56 IST)
கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பல பிரச்சனைகளைக் கடந்து இப்போதுதான் ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக மே மாதமே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதியை படக்குழு இறுதி செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி மே 16 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அரங்கம் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் நண்பர் கமல்ஹாசனுக்காக ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் லைகா நிறுவன அதிபர் சுபாஷ்கரனும் லண்டனில் இருந்து வந்து கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

எனக்கு யாரும் ரூல்ஸ் போட முடியாது.. எனக்கு புடிச்சத செய்வேன்! - கார் ரேஸ் குறித்து அஜித்குமார் பேட்டி வைரல்!

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments