Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறிவித்த தேதியில் ரிலீஸ் ஆகுமா கமலின் இந்தியன் 2 ?

அறிவித்த தேதியில் ரிலீஸ் ஆகுமா கமலின் இந்தியன் 2 ?

vinoth

, ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (07:16 IST)
கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பல பிரச்சனைகளைக் கடந்து இப்போதுதான் ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக மே மாதமே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதியை படக்குழு இறுதி செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்தியன் 2 படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சிப் படமாக்கப்படவில்லையாம். அதனால் அறிவித்த படி ஜூன் மாதத்தில் இந்தியன் 2 படம் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அந்த பாடல் காட்சியை மிகவும் முக்கியமான ஒன்றாக இயக்குனர் ஷங்கர் கருதுகிறாராம். ஆனால் லைகா நிறுவனம் இப்போது பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் அந்த பாடலை படமாக்க விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு அவர்கள் அணிக்கு வேண்டாம்… யுவ்ராஜ் சிங் கருத்து!