ரஜினியின் வேட்டையன் பட டீசர் ரிலீஸ் எப்போது? பண்டிகை நாளில் ரசிகர்களுக்கு விருந்து!

vinoth
புதன், 27 மார்ச் 2024 (07:03 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின்  பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதுவரை படத்தின் 90 சதவீதக் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இறுதிகட்ட ஷுட்டிங் நடந்து வரும் நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் படம் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு ஆதரவாக இயக்குனரும் ஹீரோவும் பேசவில்லை: நடிகை கெளரி கிஷன் ஆதங்கம்..!

மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி.. அனுஷ்கா ஷர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

இயக்குனர் ராஜ் உடன் கட்டிப்பிடித்த போட்டோவை வெளியிட்ட சமந்தா.. காதல் உறுதியா?

பிக்பாஸ் தமிழ் 9: அதிரடி டபுள் எவிக்ஷன்.. இந்த வாரம் வெளியேறுபவர்கள் யார் யார்?

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

அடுத்த கட்டுரையில்
Show comments