Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் ரிலீசுக்கு தேதி குறிச்சாச்சு… லோகேஷ் போடும் பிளான்!

தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் ரிலீசுக்கு தேதி குறிச்சாச்சு… லோகேஷ் போடும் பிளான்!

vinoth

, திங்கள், 25 மார்ச் 2024 (07:54 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.இப்போது திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ், இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்போது மே அல்லது ஜூன் மாதத்திற்குத் தள்ளிப் போகும் என சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்தை இளமையாகக் காட்ட டி ஏஜிங் தொழில்நுட்பத்தை இயக்குனர் லோகேஷ் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கான ஷூட்டிங் விரைவில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் அட்டகாசமான முதல் லுக் போஸ்டர்!