வேட்டையன் படத்தை யார் யாரெல்லாம் பாக்கலாம்… வெளியான சென்சார் தகவல்!

vinoth
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (12:32 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் டீசர் வெளியாகிக் கவனம் ஈர்த்தது.

படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் ஞானவேல் “படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்ட்டர் போலீஸாக நடிப்பது உண்மைதான். அவர் ஏன் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறினார், அதற்கான காரணம் என்ன என்பதைப் படத்தில் காட்டியுள்ளோம்” எனப் பேசியுள்ளார்.  இந்நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்துக்குள் வந்தது எப்படி என்று பேசியுள்ளார்.

அதே போல ரஜினிகாந்த் படம் குறித்து பேசும்போது “வேட்டையன் படத்துக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைத்து விதமான எதிர்பார்ப்புகளையும் படம் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” எனக் கூறியிருந்தார். இன்னும் ஒரு வாரத்தில் படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெற்றோர் வழிகாட்டுதலோடு இந்த படத்தைப் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

இவ்ளோ சினிமா பேசுறேன்.. இத என்னால செய்ய முடியல.. கமலுக்கு இருந்த வருத்தம்

என்னது ‘காதல் கோட்டை 2’வா? புது ட்விஸ்ட்டால இருக்கு.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரே

அடுத்த கட்டுரையில்
Show comments