Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை மீண்டும் பாட வைக்கின்றார் ஏ.ஆர்.ரஹ்மான்

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (22:57 IST)
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினியை கோச்சைடையான்' படத்தில் பாட வைத்தார். அதற்கு முன்னரே இசைஞானி இளையராஜா, 'மன்னன்' படத்தில் ரஜினியை பாட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினியை மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் பாட வைக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படத்தில் அறிமுகமான ரஹ்மான், தனது 25ஆண்டு கால இசைப்பயணத்தை முடித்துள்ளதை அடுத்து அவருக்கு டெல்லியில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது

டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான அரங்கில் கண்கவரும் நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ள இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். அதுமட்டுமின்றி ரஹ்மானும் ரஜினியும் இணைந்து ஒரு பாடலையும் பாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து பாடும் பாடல் எதுவாக இருக்கும் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னும் நின்னு வெடிக்கும் குட்டி பட்டாஸ்… 200 மில்லியன் பார்வைகள் கடந்து சாதனை!

எனது நூறாவது படத்தில் மோகன்லால் கண்டிப்பாக இருப்பார்… பிரியதர்ஷன் உறுதி!

ஆஸ்கருக்கு செல்லும் ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சென்சாரில் எழுந்த எதிர்ப்பு!

இறுதிகட்டத்தில் பா ரஞ்சித்தின் வேட்டுவம்… பட்ஜெட் இத்தனைக் கோடியா?

சூர்யா மகள் தியா இயக்கிய ஆவணப்படம்… ஆஸ்கருக்கு அனுப்ப முயற்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments