தலைநகரில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (21:43 IST)
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். படங்களுக்கு இசையமைப்பதில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். 
 
ரஜினியின் ‘2.0’, ராஜிவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ உள்பட தமிழ், மலையாளம், ஹிந்திப் படங்களுக்கும் தற்போது இசையமைத்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள கச்சிபோலி ஸ்டேடியத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். 
 
‘என்கோர்’ என்ற அந்த இசை நிகழ்ச்சியை, எம் டி.வி.யுடன் இணைந்து வழங்கினார். 3 மணி நேரம் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வருகிற 23ஆம் தேதி டெல்லியில் இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். அதன்பிறகு ஆந்திர அரசு சார்பில் காக்கிநாடாவிலும் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் புதிய சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகும் ஜனநாயகன்!..

ஒருவழியாக இயக்குனரை உறுதி செய்த ரஜினி!.. அட இவரா?!...

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments