Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'பொன்னியின் செல்வனை அடுத்து ரஜினிகாந்த் பாராட்டிய மற்றொரு படம்!

Rajinikanth
, திங்கள், 10 அக்டோபர் 2022 (19:10 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்தார் என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து சிரஞ்சீவி நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான காட்பாதர் படத்தையும் பார்த்து அவர் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து இயக்குனர் மோகன் ராஜா தனது டுவிட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் காட்பாதர் படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டினார் என்றும் படம் மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று அவர் கூறியது எங்களுக்கு பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் தனது வாழ்நாளில் ரஜினிகாந்த் அவர்களிடம் இருந்து பாராட்டு பெற்றது மறக்க முடியாத நிகழ்வு என்றும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
 

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவுக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்