Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ஓட்டிய கார் மோதி விபத்து!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (10:11 IST)
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ஓட்டிச் சென்ற கார், ஆட்டோ ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.  


 


இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் தூங்கி கொண்டிருந்த டிரைவர் மணி காயமடைந்தார். ஆட்டோவும் சேதமடைந்தது. இதனையடுத்து அங்கு பொதுமக்கள் திரண்டனர். ஆனால், காரில் இருந்தது ரஜினியின் மகள் சௌந்தர்யா என தெரிந்ததும், அங்கு பரபரப்பு கூடியது. 
 
மேலும், அங்கு பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸில் புகார் அளிப்பதாக ஓட்டுனர் மணி கூறியதாக தெரிகிறது. அப்போது, அங்கு நேரில் சென்ற நடிகர் தனுஷ், ஓட்டுனர் மணியுடன் பேச்ச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மணிக்கு மருத்துவ செலவையும், ஆட்டோ சேதத்திற்கான தொகையையும் அவர் கொடுக்க முன்வந்ததால், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெளி தயாரிப்பாளர் படத்தில் கமல் நடிக்க மாட்டாராம்.. 10 வருஷமா அதுதானே நடக்கிறது?

கமல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரா சாய்பல்லவி? என்ன காரணம்?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments