Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினிகாந்த் கட்சிக்கு பெயர், சின்னம், கொடி தயார்?

ரஜினிகாந்த் கட்சிக்கு பெயர், சின்னம், கொடி தயார்?
, செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (13:21 IST)
ரஜினிகாந்த் தொடங்கவுள்ள புதிய கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி ஆகியவை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ரஜினிகாந்த் அவரது ரசிகர்கள் மத்தியில் அரசியலில் ஈடுபடுவது குறித்து சூசகமாக பேசியது முதல் அவர் எப்போது அரசியலில் குதிப்பார் என்ற பரப்பில் தமிழக அரசியல் உள்ளது. இந்நிலையில் திருச்சியில் நடைப்பெற்ற மாநாட்டில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மனியன் பேசியது ரஜினிகாந்த் அரசியலில் ஈடுப்பட உள்ளதை உறுதியாக்கியுள்ளது.
 
இருந்தாலும் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. இந்நிலையில் அவர் தொடங்கவுள்ள கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி ஆகியவை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மேலும் கட்சிக்கு சில பெயர்களை முடிவு செய்து வைத்திருப்பதாகவும், அதில் ஒன்றை தேர்வு செய்ய உள்ளதாகவும் நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் கவணம் செலுத்தும் தனுஷ்