Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்தார் ரஜினிகாந்த்: வைரல் புகைப்படங்கள், வீடியோ!

Webdunia
புதன், 12 மே 2021 (15:04 IST)
சென்னை வந்தார் ரஜினிகாந்த்: வைரல் புகைப்படங்கள், வீடியோ!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஹைதராபாத்தில் நடந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு சற்று முன் சென்னை வந்து இறங்கிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகி இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்றதாக சமூகத்தின் தகவல் வெளிவந்தது 
 
இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்ப உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்று முன் அவர் சென்னை திரும்பியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரஜினிகாந்த் அவருடைய வீட்டிற்குள் நுழையும் போது அவருடைய மனைவி லதா ஆரத்தி எடுக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது
 
இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விரைவில் அவர் டப்பிங் பணிகளில் ஈடுபடுவார் என்பதும் அதன் பின்னர் அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments