Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 5 April 2025
webdunia

தோனியின் கிராபிக் நாவலின் முதல் பிரதியை வெளியிட்ட ரஜினிகாந்த்!

Advertiesment
ரஜினிகாந்த்
, ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (10:35 IST)
தோனியை மையக் கதாபாத்திரமாக அதர்வா என்ற பெயரில் ஒரு கிராபிக் நாவல் உருவாகியுள்ளது.

மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ ஒரு மெகா பட்ஜெட் கிராஃபிக் நாவலை உருவாக்கியுள்ளது. அதர்வா - தி ஆரிஜின்  எனும் இந்த நாவலில் நாயகனாக தோன்றுகிறார் எம்.எஸ்.தோனி. ரமேஷ் தமிழ்மணி என்பவர் இதனை எழுதியுள்ளார். இந்நிலையில் இந்த கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டரை இன்று தோனி தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தோனியின் இந்த புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காமிக்ஸ் அமேசான் தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த நாவலின் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். நாவலை பரவலாக விளம்பரம் செய்யும் விதமாக இந்த முயற்சியை செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சினிமாவில் டிடி… காமெடிக்கு பேர் போன இயக்குனர் படத்தில் ஒப்பந்தம்!