Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் பில்லா தோல்வி படமா? இயக்குனர் விஷ்ணுவர்தான் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்!

vinoth
திங்கள், 13 ஜனவரி 2025 (08:59 IST)
அஜித்துக்கு பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த விஷ்ணுவர்தன், மீண்டும் அஜித் பட வாய்ப்புக்காக காத்திருந்தார். விரைவில் அவர்கள் இணையக்கூடும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் விஷ்ணுவர்தன் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடித்துள்ள நேசிப்பாயா என்ற படத்தை இயக்கி முடித் துள்ளார். இந்த படம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகியுள்ளது.இந்நிலையில் சமீபத்தைய பேட்டி ஒன்றில் பேசிய விஷ்ணுவர்தான் தான் இயக்கிய பில்லா படத்தின் ஒரிஜினலான ரஜினிகாந்தின் பில்லா படம் தோல்வி படமாக அமைந்தது எனப் பேசியிருந்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் கோபமாகி எதிர்வினையாற்றி வந்த நிலையில் ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸும் இப்போது அதற்கு பதிலளித்துள்ளார்.

அதில் ‘1980 ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் பில்லா திரைப்படம் ஒரு சில்வர் ஜூப்ளி திரைப்படம்.  அதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். நீங்கள் இதை பில்லா படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜியிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். தவறான தகவல்களை தவிர்க்குமாறு நான் உங்களைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸில் பெற்ற வெற்றிக்குப் பின்னர் ஷாலினிக்கு நன்றி சொன்ன அஜித்!

அஜித்குமார் இந்த தேசத்தின் பெருமை! போஸ்டர் ஷேர் செய்து திரைப்பிரபலங்கள் வாழ்த்து மழை!

3வது இடத்தை பிடித்து இந்தியாவுக்கே பெருமை.. அஜித் அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

கிளாமர் லுக்கில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

மஞ்சள் நிறமே… மஞ்சள் நிறமே… மாளவிகாவின் கலர்ஃபுல் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments