Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அண்ணாத்த’ படப்பிடிப்பில் ரஜினி: வைரலாகும் புகைப்படங்கள்!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (16:48 IST)
’அண்ணாத்த’ படப்பிடிப்பில் ரஜினி:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது அரசியல் வருகையை உறுதி செய்த போது ’அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டியது தன்னுடைய கடமை என அறிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே டிசம்பர் 15 முதல் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் சென்றுள்ளார் 
 
’அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக ஐதராபாத் செல்லவுள்ள ரஜினிகாந்த் விமானத்தில் ஏறும் புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது. ஐதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்த மாதம் சென்னை திரும்பும் ரஜினிகாந்த் அதன் பின்னர் முழு மூச்சாக அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இது ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட குடும்ப சென்டிமென்ட் படம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்கும் ரவி மோகன்.. என்ன காரணம்?

மாநிலங்களவை உறுப்பினர் பதவியேற்பு… நண்பர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்!

தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து சோகம்.. பிரபல நடிகர் ரவி தேஜாவின் தந்தை காலாமானார்!

கியாரா அத்வானிக்குப் பெண் குழந்தை பிறந்தது…! ரசிகர்கள் வாழ்த்து மழை

கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தில் இருந்து விலகினாரா நிவின் பாலி?

அடுத்த கட்டுரையில்
Show comments