Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’தமிழ் சினிமாவை அரசன்போல் ஆளும் தலைவர் ரஜினி’’…. நடிகர் வடிவேலு வாழ்த்து

Advertiesment
’’தமிழ் சினிமாவை அரசன்போல் ஆளும் தலைவர் ரஜினி’’…. நடிகர் வடிவேலு வாழ்த்து
, சனி, 12 டிசம்பர் 2020 (16:57 IST)
இன்று ரஜினிகாந்த் தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனால் பல்வேறு பிரமுகர்கள், ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பிரபல நடிகர் வடிவேலு அவருக்கே உரிய பாணியில் அவர் ரஜினிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இருபது வருடங்களுக்கு மேலாகத் தன் அரசியல் வருகையை சஸ்பென்ஷாக வைத்திருந்த ரஜினிகாந்த், முதன்முதலாக கடந்த 2017 ஆம் ஆண்டு தனது ஆன்மீக அரசியலை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த வாரம் தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்தார். அதன்படி அதற்கான வேலைகளையும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது,. அவரது கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்ஜூன் மூர்த்தியும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கட்சியில் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணி வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
webdunia

இன்று இன்று ரஜினிகாந்த் தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நடிகர் வடிவேலு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில், நான்கு தசாப்தங்களாக தமிழ் சினிமாவை அரசன் போல் ஆளும் தலைவர் ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.#vadivelu #rajinikanth70thbirthday
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகைகள் மட்டுமல்ல யாருமே தற்கொலை செய்துகொள்ள கூடாது – விவேக் அறிவுரை!