மும்பைக்குப் பறந்த ரஜினிகாந்த்.. லால் சலாம் ஷூட்டிங்கில் பங்கேற்பு!

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (14:28 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்திற்காக திருவண்ணாமலையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் திருவண்ணாமலையில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்ளவில்லை. திருவண்ணாமலை அருகே நடக்கும் படப்பிடிப்பை பார்ப்பதற்காக ரஜினிகாந்த் திடீரென்று ஒரு நாள் சென்றுள்ளாராம். அன்று முழுவதும் அங்கு இருந்து மகள் ஐஸ்வர்யா படம் இயக்கும் ஸ்டைலை பார்த்து திரும்பினார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது படத்தில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை தொகுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு காண்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. காட்சிகளைப் பார்த்த ரஜினிகாந்த், ஐஸ்வர்யாவையும் படக்குழுவைவும் ‘சிறப்பாக வந்துள்ளதாக’ பாராட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் ரஜினி சம்மந்தப்பட்டக் காட்சிகளை இப்போது மும்பையில் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக ரஜினிகாந்த் மும்பைக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. விரைவில் லால் சலாம் ஷூட்டிங்கை ரஜினிகாந்த் நிறைவு செய்ய உள்ளார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments