Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லால் சலாம் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி இதுதானா?

லால் சலாம் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி இதுதானா?
, வியாழன், 23 நவம்பர் 2023 (07:44 IST)
ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் புதுபடம் என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் சம்மந்தமான சில காட்சிகள் மும்பையில் சில மாதங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டது.

ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் திருவண்ணாமலை மற்றும் மும்பையில் படமாக்கி முடிக்கப்பட்டன. பின்னர் ஒருநாள் சென்னையில் ஒருநாள் படமாக்கப்பட்டது. இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் டிசம்பர் 20 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொள்வார்கள் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விசித்ராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தெலுங்கு நடிகர் இவர்தானா? நெட்டிசன்கள் விவாதம்!