ரஜினி-லைகா-ஐஸ்வர்யா படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (11:22 IST)
ரஜினி-லைகா-ஐஸ்வர்யா படத்தின் டைட்டில் அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் சற்று முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்துக்கு ’லால் சலாம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் முக்கிய கேரக்டரில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவும், ப்ரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு பணிகளையும் செய்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments