Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ''ஜெயிலர்'' பட FDFS டிக்கெட்டுகளை மாலையாக அணிந்து மகிழ்ந்த ரசிகர்...

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (16:24 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர், ஜெயிலர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார்,  ஜாக்கிஷெராப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சிறப்பாக  நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் தன் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட பலருக்கும் சேர்ந்து அங்குள்ள தியேட்டரில்,ஜெயிலர் படத்தை முதல் நாள் முதல் ஷோ என்று அழைக்கப்படும் FDFS காட்சியை பார்க்க பல டிக்கெட்டுகள் புக் செய்து அந்த டிக்கெட்டுகளை மாலைபோல் கழுத்தில் அணிந்துகொண்டார். இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தான் நடித்த கேரக்டரின் பெயரை நிஜ பெயராக மாற்றி கொண்டா நடிகர் சாம்ஸ்.. குவியும் வாழ்த்துக்கள்..!

ஸ்டைலிஷான உடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கார்ஜியஸ் கேர்ள் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

ரிலீஸ் தேதியை உறுதி செய்த பாலகிருஷ்ணாவின் ‘அகாண்டா 2’ படக்குழு!

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா… இரண்டாம் பாகத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments