Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் மனசிலாயோ பாடலுக்கு செம்ம ஸ்டெப் போட்ட ரஜினி & கோ!

கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் மனசிலாயோ பாடலுக்கு செம்ம ஸ்டெப் போட்ட ரஜினி & கோ!
, திங்கள், 16 செப்டம்பர் 2024 (10:07 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆந்திரா மழையால் பாதிக்கப்பட்டிருந்த ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஓனம் பண்டிகையை முன்னிட்டு கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி மற்றும் படக்குழுவினர் வேட்டையன் பட பாடலான ‘மனசிலாயோ’ பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அந்த பாடல் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொட்டுக்காளி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!