Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று முதல் மீண்டும் கூலி ஷூட்டிங்கில் இணையும் ரஜினி…!

இன்று முதல் மீண்டும் கூலி ஷூட்டிங்கில் இணையும் ரஜினி…!

vinoth

, திங்கள், 21 அக்டோபர் 2024 (10:51 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக ஐதராபாத்தில் நடந்து வருகிறது.  லோகேஷ் கன்கராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  மேலும் அமீர்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்த தகவல் குறித்து தற்போது மேலதிக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்ட ரஜினிகாந்த், ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் இன்று முதல் மீண்டும் கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயிலர் 2 படத்தில் தனுஷுக்கு ஒரு வேடமா? நெல்சன் போட்ட ஸ்கெட்ச்!