மூன்றாம் நாளில் ‘கூலி’ படத்தின் வசூல் எவ்வளவு?

vinoth
ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (10:43 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்த ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவான ‘கூலி’ படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு ‘பில்டப்’ கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் இன்று படம் வெளியான முதல் காட்சியிலேயே கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. புதிதாக எதுவும் இல்லாமல் மசாலா படங்களுக்கே உரிய அதே டெம்ப்ளேட் திரைக்கதை, கதாநாயக வழிபாடு என அரைத்த மாவையே லோகேஷ் அரைத்துள்ளார் என ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த படம் முதல் நாளில் 151 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. இரண்டாம் நாளில் இந்திய அளவில் 55 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லப்பட்டது. அதையடுத்து நேற்று மூன்றாம் நாளில் இந்திய அளவில் 39 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக ஆன்லைன் ட்ராக்கிங் தளமான சாச்லின்க் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்! நடிகர் துல்கர் சல்மானுக்கு சம்மன்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் ஏ ஆர் ரஹ்மான்… ‘பெட்டி’ முதல் சிங்கிள் அப்டேட்!

சம்பளத்தைக் கொஞ்சம் கம்மியாக வாங்குங்கள்.. சக நடிகர்களுக்கு விஷ்ணு விஷால் கோரிக்கை!

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments