Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியிடம் பாராட்டு பெற்ற அஜித் பட வில்லன்

ரஜினியிடம் பாராட்டு பெற்ற அஜித் பட வில்லன்
, புதன், 8 மார்ச் 2017 (21:15 IST)
அஜித் நடித்த என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களிடையே பெரும்புகழ் பெற்றவர் நடிகர் அருண்விஜய். இவர் நடித்த 'குற்றம் 23' திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.









இந்நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகினர்களும் கொண்டாடி வருகின்றனர். திரையுலகில் அருண்விஜய்க்கு அதிக நண்பர்கள் இருப்பதால் நாலாபக்கங்களில் இருந்தும் அருண்விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 'குற்றம் 23' படத்தை பார்த்து அருண்விஜய்க்கு போன் செய்து வாழ்த்துக்களும் பாராட்டையும் தெரிவித்தார்

இதுகுறித்து அருண்விஜய் தனது டுவிட்டரில் கூறியபோது, 'குற்றம் 23 படம் சுவாரஸ்யமாக இருந்ததாக பாராட்டிய ரஜினிகாந்த்,படக்குழுவினருக்கும் இயக்குநர் அறிவழகனுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.போலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தை அருண் விஜய் சிறப்பாக செய்திருப்பதாக ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ரஜினியின் இந்த பாராட்டால் ஆஸ்கர் விருது கிடைத்த சந்தோஷத்திற்கு இணையான சந்தோஷத்தை அருண்விஜய் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை சாவித்ரி வாழ்க்கை வரலாறு: 'மகாநதி' போஸ்டர் வெளியீடு!