Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறையாக கமலின் விக்ரம் வெற்றி பற்றி பேசிய ரஜினிகாந்த்!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (14:34 IST)
நடிகர் கமல்ஹாசனின் சமீபத்தைய வெற்றிப்படமான விக்ரம் திரைப்படம் பற்றி பொன்னியின் செல்வன் மேடையில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் நேற்று ரிலீஸ் ஆனது. விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர். மேடையில் ரஜினி, கமல் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் ஒன்றாக தோன்றி பேசினர்.

விழாவில் கமல் பேசி முடித்ததும், ரஜினிகாந்த் பேச ஆரம்பித்ததும், “எல்லோருக்கும் நன்றி. முதலில் விக்ரம்…. (கமலைப் பார்த்து)… கமல் சாரின் விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.” என்று பேச ஆரம்பித்தார்.

ஜூன் மாதம் ரிலீஸான விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை அதிகமான வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது. படம் பற்றி ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் பாராட்டித் தள்ளிவிட்ட நிலையில் ரஜினி எங்கேயும் அந்த படம் பற்றி பேசவில்லை. முதல் முறையாக இந்த மேடையில்தான் விக்ரம் திரைப்படம் பற்றி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments