Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15-ஆம் தேதி ரசிகர்களை சந்திக்க இருக்கும் ரஜினி?

15-ஆம் தேதி ரசிகர்களை சந்திக்க இருக்கும் ரஜினி?

Webdunia
புதன், 10 மே 2017 (15:46 IST)
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை அவரது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள நிகழ்ச்சி ஒன்றை திட்டமிட்டிருந்தார்.


 
 
ஆனால் அந்த நிகழ்ச்சியை ரஜினிகாந்த் ஏப்ரல் 8-ஆம் தேதி திடீரென ரத்து செய்துள்ளார். மேலும், சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கான விளக்கத்தை வாட்ஸ் ஆப் ஆடியோ ஒன்றின் மூலம் வெளியிட்டார்.
 
அதில், உங்களை (ரசிகர்கள்) சந்தித்து உங்களுடன் போட்டோ எடுத்து 10 ஆண்டுகளாகிவிட்டது. சரியான வாய்ப்பும், நேரமும் இல்லாததால் அது நடக்காமல் போய்விட்டது. வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
 
சுமார் 1500 முதல் 2000 பேரை சந்தித்து போட்டோ எடுத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால், தற்போது அந்த சந்திப்பை நடத்த முடியாத சூழல் உள்ளது. ஆகையால் அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
வரும் காலத்தில் ஒவ்வொரு மாவட்ட ரசிகர்களை தனித்தனியாக சந்தித்து போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்படும், இதுபற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றார். இந்நிலையில் வரும் மே 15-ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல் வருகின்றன.
 
மே 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள ரசிகர்களுடனான சந்திப்பில் கலந்துகொள்ள கரூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்ட சேர்ந்த ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments