Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகர்களை சந்திக்கும் ரஜினி! மீண்டும் அரசியலா??

Advertiesment
Rajini meets fans
, சனி, 10 ஜூலை 2021 (18:35 IST)
ரஜினிகாந்த் விரைவில் தன் ரசிகர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர்  மருத்துவபரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு சென்று இருந்தார். அங்கு அவர் உடல் பரிசோதனை செய்து விட்டு கடந்த 09 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் சென்னை திரும்பினார்.

 ரஜினிகாந்த் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் ரஜினி தரப்பினர் கூறியுள்ளனர். ரஜினிகாந்த் முழு உடல் நலத்துடன் மீண்டும் சென்னை திரும்பி உள்ளது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், வரும் ஜூலை 12 ஆம் தேதி தன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சென்னையில் சந்திக்க உள்ளார். தான் அரசியலுக்கு வரவில்லை எனக் கூறிய தன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் வேறு கட்சிகளுக்கு தாவி வரும் நிலையில் ரஜினி இந்த சந்திப்பு மேற்கொண்டு ரசிகர்களுடன் பேசவுள்ளார்.

ரஜினி என்ன பேசவுள்ளார் என்பதைக் கேட்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலின் விக்ரம் பட போஸ்டர் ரிலீஸ் !