Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கௌதம் மேனன் இயக்கத்தில் ரஜினி?

கௌதம் மேனன் இயக்கத்தில் ரஜினி?

கௌதம் மேனன் இயக்கத்தில் ரஜினி?
, ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (11:37 IST)
நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விரைவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
நடிகர் ரஜினி தற்போது இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து யார் படத்தில் நடிக்கிறார் என்று தெரியாமல் இருந்தது.
 
ஆனால், அடுத்து ரஜினியை இயக்கப்போவது  கௌதம் மேனனாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 
கௌதம் மேனன், கபாலி படம் தொடங்குவதற்கு முன்பே, ரஜினியிடம் ஒரு கதையை கூறியிருந்ததாகவும், கதை ரஜினிக்கு பிடித்தாலும், சில மாற்றங்களை அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பின் ரஜினி கபாலியில் நடித்தார். கௌதம் மேனன், சிம்புவுடனும், தனுஷுடனும்  படம் தொடங்கி விட்டார்.
 
இந்நிலையில், அடுத்து அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்பிருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை அமலாபாலை ஆர்யா திருமணம் செய்து கொண்டாரா?