பிரபல இயக்குநர் படத்தில் ரஜினி பட வில்லன் நடிகர்

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (20:16 IST)
இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் பிரபல இயக்குநர் படத்தில் மீண்டும் இணையவுள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநர் பிரியதர்ஷன். இவர் தமிழில் லேசா லேசா, சிறைச்சாலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இவரது இயக்கத்தில் தற்போது இந்தியில்  உருவாகியுள்ள ஹங்கமா 2 படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதேபோல் மோகன் நடிப்பில் பிரியதர்ஷன்  இயக்கத்தில் உருவாகியுள்ள மரக்காயர் படமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிஷியாக உள்ளார் இயக்குநர் பிரியதர்ஷன்.

மேலும், ரஜினி நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய்குமார் பிரியதர்ஷனின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது ரக்‌ஷா பந்தன் படப்பிடிப்பில் கவனம் செலுத்டி வரும் அக்‌ஷய்குமாரை ஷூட்டிங் தளத்திற்குச் சென்று பிரியதர்ஷன் ஆலோசித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் ‘ஆட்டோகிராஃப்’ வேண்டாம்னு சொல்லிட்டார்.. விக்ரம் குறித்து சேரன்!

தலைப்பே எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது – கிஸ் பட இயக்குனர் சதீஷ் வேதனை!

இது என் கடமை!.. காசு வேண்டாம்!. அபிநய்க்காக நடிகரிடம் பணம் வாங்க மறுத்த KPY பாலா!...

காந்தா படத்துக்கு எழுந்த சிக்கல்… தியாகராஜ பாகவதரின் பேரன் வழக்கு..!

தனுஷின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபுதேவா…!

அடுத்த கட்டுரையில்
Show comments