Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2.0 டிக்கெட் வாங்கும் முறை –ரசிகர்களுக்கு மன்றம் அறிவுரை

Webdunia
ஞாயிறு, 18 நவம்பர் 2018 (08:45 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் நவம்பர் 29-ந்தேதி வெளியாகும் 2.0 படத்தின் டிக்கெட் வாங்கும் முறைகளைப் பற்றி அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் ஷங்கர் பிரம்மாண்டமாக இயக்கியுள்ள 2.0 படத்தினை லைகா புரொடக்‌ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 600 கோடி என்று சொல்லப்படுகிறது. அதனால் அரசு நிர்ணயித்த விலைப்படி தியேட்டர்களில் டிக்கெட் விற்றால் உடனடியாக லாபம் எடுக்க முடியாது என்ற காரணத்தால் அதிக விலைக்கு டிக்கெட் விற்க தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து இப்போது ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினி ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதில் ‘ உள்ளூர் மன்றங்கள் ரசிகர் மன்றக் காட்சி என சொல்லி பெற்ற டிக்கெட்களை ரசிகர் மன்றத்தைத் தவிர பிறருக்கு விறகக்கூடாது. மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இருக்கைளுக்கு ஏற்ப நிர்ணயித்த (அரசு நிர்ணயித்த விலை கிடையாது) விலைக்கு மேல் ரசிகர்களிடம் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்கக்கூடாது. மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிக்கை வெளியாகியுள்ளது/

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments