உங்க படத்துல என்ன கிண்டல் பண்ணீங்கல்ல… லவ் டுடே இயக்குனரிடம் கேட்ட ரஜினி!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (15:34 IST)
சமீபத்தில் வெளியான லவ்டுடே திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் இதுவரை 50 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து இந்த படத்தின் இயக்குனர் பிரதீப்பை அழைத்து பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த சந்திப்பைப் பற்றி இப்போது பகிர்ந்துள்ள பிரதீப் ரங்கநாதன் “ரஜினி சார் கோமாளி படத்துல என்ன கிண்டல் செஞ்சீங்கல்ல. எனக்கு ஒன்னும் அதுல பிரச்சன இல்ல” எனக் கூறினாராம்.

கோமாளி படத்தில் கோமாவில் எழுந்திருக்கும் ஜெயம் ரவி ரஜினி தன்னுடைய அரசியல் வருகை குறித்து பேசும் போது அதைக் கேட்டு அதிர்ச்சி அடைவார். இந்த காட்சி ரஜினி ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments