Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'இளையராஜா 75' விழாவில் பங்கேற்க ரஜினி, கமல் சம்மதம்: விஷால் தகவல்

'இளையராஜா 75' விழாவில் பங்கேற்க ரஜினி, கமல் சம்மதம்: விஷால் தகவல்
, வெள்ளி, 18 ஜனவரி 2019 (12:36 IST)
நடிகர் ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேற்று சந்தித்தார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த சந்திப்பில் இளையராஜா 75 நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுத்தார். அப்போது நடிகர் மனோபாலா உடன்  இருந்தார்.
 
இதேபோல் நடிகர் கமல்ஹாசனையும் விஷால் சந்தித்து இளையராஜா 75 நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு  அழைப்பு விடுத்தார். இந்நிலையில் ரஜினி, கமல் இருவரும் விழாவுக்கு வர சம்மதித்து உள்ளதாக விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
webdunia
இளையராஜா இசை நிகழ்ச்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், வருகிற பிப்ரவரி மாதம் 2, 3 ஆகிய தேதிகளில்  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனிஷாவுடன் காதல் மலர்ந்தது எப்படி: விஷால் பேட்டி