நடிகர் கதிர் நடிபில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் பேட்ட , விஸ்வாசம் என தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைக்கும் இரு பெரும் ஜாம்பவான்கள் மோதிக்கொண்டுள்ள இந்த பொங்கலில் தெரிந்தே தேவையில்லாமல் வந்து மாட்டிக்கொண்டது சிகை.
சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் மக்களிடம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறுவது உறுதி. அப்படி நல்ல வித்யாசமான கதையம்சம் கொண்டிருந்தும் அதிகாரவர்க்கத்தால் ஏழை நீதிக்காக வாதாடுவது போன்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது கதிரின் சிகை படத்திற்கு.
தியேட்டர் சிக்கல்கள், பட வியாபாரம் என பல விசயங்களை கடந்து படத்தை வாங்கக்கூட யாரும் முன்வரவில்லை என்பதே உண்மை. அப்படியான ஒரு நிலைக்கு தான் சிகை படம் தள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன "பரியேறும் பெருமாள்" என்ற படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருந்த கதிருக்கு தற்போது யாரும் கைகொடுக்க முன்வரவில்லை. மாறாக உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை கொஞ்சம் பொறுத்திருந்து படத்தை ரிலீஸ் செய்தால் என்ன என்று கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கிறார்கள் .
இதில் சோகம் என்னவென்றால் சிகை படம் வியாபாரமாகாததால் நேரடியான ஜீ5 செயலியில் வெளிவந்துள்ளது. இருந்தும் வருத்தத்தில் இருக்கும் நடிகர் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படத்தை மக்கள் 29 ரூபாய் செலவழித்து பார்ப்பதற்கு யோசிக்கமாட்டார்கள் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.