Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் நடந்த ரஜினி 170 படத்தின் பூஜை!

சென்னையில் நடந்த ரஜினி 170 படத்தின் பூஜை!
, சனி, 26 ஆகஸ்ட் 2023 (13:13 IST)
ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் லைகாவின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் தொடங்கப்பட வில்லை எனத் தெரிகிறது. இப்போது செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பஹத் பாசில், மஞ்சு வாரியர், நானி, ஷர்வானந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று இந்த படத்தின் பூஜை நடந்துள்ளது. விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜா காலில் விழுந்து ஆசி வாங்கிய தேவி ஸ்ரீ பிரசாத்!