ராஜமௌலி & மகேஷ் பாபு இணையும் படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன்!

vinoth
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (08:30 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, கீரவாணி இசையமைக்கிறார். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. ஒரிசாவில் ஷூட்டிங் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக வாரணாசி செட் அமைத்துக் காட்சிகளை எடுக்கவுள்ளார் ராஜமௌலி. இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மகேஷ் பாபுவின் பிறந்தநாளுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் வேலைகள் முடியாததால் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என ராஜமௌலி அறிவித்தார்.

இதற்கிடையில் இந்த திரைப்படத்தை வழங்குபவரான ஜேம்ஸ் கேமரூன் தன்னுடைய அவதார் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக இந்தியா வரும் போது தன் படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமன்னாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படத் தொகுப்பு!

மாளவிகா மோகனின் வித்தியாச உடை போட்டோஷூட் ஆல்பம்!

உருவாகிறது ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’… ஹீரோ சாண்டி மாஸ்டரா?

அஞ்சான் ரி ரிலீஸில் சிறு மாற்றம்… புது வெர்ஷனைப் பார்த்த பிரபலங்கள்!

எனக்கு அது மட்டும்தான் பிரச்சனை… மதங்கள் குறித்து ஏ ஆர் ரஹ்மான் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments