ஓடிடியில் நேரடியாக ஸ்ட்ரீம் ஆகும் ராஜமௌலி- மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு நிகழ்ச்சி!

vinoth
செவ்வாய், 4 நவம்பர் 2025 (08:39 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, கீரவாணி இசையமைக்கிறார். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. ஒரிசாவில் ஷூட்டிங் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக வாரணாசி செட் அமைத்துக் காட்சிகளை எடுக்கவுள்ளார் ராஜமௌலி. இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மகேஷ் பாபுவின் பிறந்தநாளுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் வேலைகள் முடியாததால் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என ராஜமௌலி அறிவித்தார்.

இந்த படத்தின் 2000 கோடி ரூபாய் என்றும் 10000 கோடி ரூபாய் வசூலை எதிர்நோக்கி இந்த படத்தை எடுத்து வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. அதனால் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த படத்தை பெரியளவில் ரிலீஸ் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் அறிவிப்பு நிகழ்ச்சி வரும் நவம்பர் 15 ஆம் தேதி மாலை ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடக்கவுள்ளது. அதை ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நேரடியாக ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரம்மாண்ட அறிவியல் புனைகதை படம்… கைகோர்க்கும் ஏஜிஎஸ்- ப்ரதீப்பின் அடுத்த பட அப்டேட்!

இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகிறதா பிரசாந்த் நீல் & ஜூனியர் என் டி ஆர் படம்?

மீண்டும் வருகிறது ‘புதிய பாதை’… ரீமேக் செய்து நடிக்கும் பார்த்திபன்!

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments