Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகேஷ்பாபு ராஜமௌலி இணையும் படத்தின் டைட்டில் இதுவா? வெளியான தகவல்!

மகேஷ்பாபு ராஜமௌலி இணையும் படத்தின் டைட்டில் இதுவா? வெளியான தகவல்!

vinoth

, திங்கள், 4 மார்ச் 2024 (14:32 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த படம் இண்டியானா ஜோன்ஸ் போல ஒரு சாகசப் படம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெரும்பாலான காட்சிகள் காடுகளில் படமாக்கப்பட உள்ளதாகவும், ஏராளமான விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் வெளிநாட்டில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக இந்தோனேஷியாவை சேர்ந்த நடிகை செல்சீ இஸ்லன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த படத்துக்கு மஹாராஜா என்ற  தலைப்பை வைக்க ராஜமௌலி ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மகாராஜா என்ற தலைப்பில் விஜய் சேதுபதி நித்திலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவர் இயக்கத்தில் நடிப்பது 100 படங்களில் நடிப்பதற்கு சமம்- அருண் விஜய் பெருமிதம்!