Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசைப் படைப்புகளுக்கு ஜி எஸ் டி- ரஹ்மான் & ஜி வி பிரகாஷ் மனுக்கள் தள்ளுபடி!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (11:31 IST)
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்ச ரூபாய் அளவுக்கு வரி கட்டாமல் ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதை கட்டவேண்டும் எனவும் ஜி எஸ் டி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக ஏ ஆர் ரஹ்மான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் “ இசைப் படைப்புகளை அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு காப்புரிமை வழங்கிய பின்னர் என்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதமானது மற்றும் என் புகழுக்கு களங்கம் விளைவிப்பது.” எனக் கூறியிருந்தார். இதே போன்ற மனுவை மற்றொரு இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷும் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ஜி எஸ் டி ஆணையரின் வாதத்தில் “கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தை ஜிஎஸ்டி மேல் முறையீட்டிலேயே தீர்த்துக் கொண்டிருக்கலாம். அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்” எனக் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து ரஹ்மான் மற்றும் ஜி வி பிரகாஷ் ஆகியோரின் மனுக்களை விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவையில் தொடங்கும் ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… எப்போது தெரியுமா?

திருமணமானவர்கள் யாருமே சந்தோஷமாக இல்லை… ஐஸ்வர்யா லஷ்மி கருத்து!

கொலாம்பஸ் கொலாம்பஸ் விட்டாச்சு லீவு… ஷூட்டிங்கை முடித்து ரேஸுக்குக் கிளம்பிய அஜித்!

நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்த நடிகை.. திடீரென வாபஸ் பெற்றதால் பரபரப்பு..!

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்ஜே பாலாஜி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments