பென்ஸ் படத்தின் தாமதத்தால் காஞ்சனா படத்தில் கவனம் செலுத்தும் ராகவா லாரன்ஸ்!

vinoth
புதன், 1 ஜனவரி 2025 (08:23 IST)
லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரெமோ மற்றும் சுல்தான் படங்களை இயக்கிய நிலையில் தற்போது மூன்றாவது படமாக பென்ஸ் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார். சாய் அப்யங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

இந்த படத்தை முதலில் லோகேஷின் நண்பரான ரத்னகுமார்தான் இயக்க இருந்தார். அதன் பின்னர் இயக்குனர் மாற்றம் நடந்துள்ளது. படத்தின் திரைக்கதைப் பணிகள் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தை தன்னுடைய எல் சி  யு உலகத்தில் இணைக்க லோகேஷ் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்கள் ஆகியும் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்நிலையில் பென்ஸ் படம் தாமதம் ஆவதால் ராகவா லாரன்ஸ் தன்னுடைய ஹிட் படமான காஞ்சனாவின் அடுத்த பாகத்தை உருவாக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

கமல்& அன்பறிவ் படத்துக்கு மலையாள இசையமைப்பாளர்… வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments