Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்ல ஒரு பாலய்யா ஸ்டைல் படமாக லாரன்ஸின் ருத்ரன்… சென்சார் தகவல்!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (08:20 IST)
நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் முதலில் அறிவிக்கப்பட்டது. ‘ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தை திடீரென தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து சென்னை மற்றும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு சில கட்டங்களாக நடந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் இப்போது கடைசி கட்ட காட்சிகள் சென்னை பெரும்பாக்கத்தில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது மொத்த ஷூட்டும் முடிந்து ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலரில் இடம்பெற்றிருந்த ஆக்‌ஷன் காட்சிகள் பாலய்யா படத்தை பார்ப்பது போல நம்ப முடியாத அளவுக்கு இருந்தன. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

’பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகனாக இவர் தான் நடித்திருக்க வேண்டும்: மாரி செல்வராஜ்

அஜித் - ஆதிக் இணையும் ‘ஏகே 64’ படத்தின் நாயகி இவர் தான்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments