Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகவா லாரன்ஸ் தனது தாயாரின் கோவிலை திறக்க சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு!

Advertiesment
ராகவா லாரன்ஸ் தனது தாயாரின் கோவிலை திறக்க சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு!
, திங்கள், 20 பிப்ரவரி 2017 (12:47 IST)
நடிகர் ராகவா லாரன்ஸ் தாயின் மனதே ஒரு கோவில் தான். அந்த தாய் வாழும் போதே கோவில் கட்டி பெருமைப்படுத்த வேண்டும் என்பதே எனது ஆசை முன்னரே தெரிவித்திருந்தார்.

 
இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது தாய் கண்மணிக்காக சொந்த ஊரான பூவிருந்தமல்லி  அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் கோவில் கட்டி வந்தார். இந்தப்பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில்,  தாய்க்காக கட்டிய கோவிலை திறக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ரஜினிகாந்த்  ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.
 
இது தொடர்பாக ராகவா கூறுகையில், நான் என்னுடைய தாயின் கோவிலை திறக்க திட்டமிட்டுள்ளேன். அதற்காக சூப்பர்  ஸ்டார் ரஜினி சாரை அழைத்துள்ளேன். மேலும் நண்பர்கள் மற்றும் ரசிகர்ளாகிய உங்களுடைய ஆதரவும், வாழ்த்துக்களும் எனக்கு வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது தாயாரின் உருவச்சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தகது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமன்னாவும் இப்போ வடசென்னை பொண்ணு