Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் போஸ்டர் மீது சாணி: ரசிகர்கள் கொந்தளிப்பால் ராகவா லாரன்ஸ் எடுத்த திடீர் முடிவு

Webdunia
ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (08:49 IST)
நேற்று நடைபெற்ற ரஜினிகாந்த் அவர்களின் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய ராகவா லாரன்ஸ் ரஜினியை கொஞ்சம் ஓவராகவே புகழ்ந்தார். அதுமட்டுமின்றி ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு அவர் எச்சரிக்கையும் விடுத்தார் 
 
இதனையடுத்து அவர் ஆர்வக்கோளாறில் ரஜினியை மிகைப்படுத்தி பாராட்டும் கொண்டிருந்தபோது திடீரென கமல் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். தான் சிறுவயதில் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்த போது கமல் போஸ்டரில் சாணி அடித்ததாகவும், ஆனால் அது அறியாத வயதில் செய்த தவறு என்றும் அதன் பின்னர் தற்போது கமல் ரஜினி ஆகிய இருவரும் இணையும் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் 
 
ராகவா லாரன்ஸ் இந்த பேச்சு கமல் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கமல் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து ஒரு விளக்கத்தை ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். கமல் குறித்து பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், சிறுவயதில் தான் அறியாமல் செய்த தவறு தான் அது என்றும் ஆனால் அதனை ஒரு சிலர் வேண்டுமென்றே பெரிதாக்குவதாகவும் கூறினார் 
 
மேலும் தான் பேசிய முழு வீடியோவையும் பார்த்தால் கமல் அவர்களை தான் எந்த விதத்திலும் தவறாக பேசவில்லை என்பது தெரியும் என்றும் கமல் மீதுதான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவருடன் கைகோர்த்து நடப்பது தனக்கு பெருமை என்றும் தெரிவித்துள்ளார் 
 
இருப்பினும் தனது பேச்சின் பேச்சால் யாருக்காவது வருத்தம் ஏற்பட்டு இருந்தால் அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ராகவா லாரன்ஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். ராகவா லாரன்ஸ் இந்த அறிக்கைக்கு பின்னரும் கமல் ரசிகர்கள் கருமையாக அவரை விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments