Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தர்பார் படத்தின் மிகப்பெரிய ரகசியத்தை வெளியிட்ட ஆர் முருகதாஸ்!

Webdunia
ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (07:59 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது 
 
இந்த விழாவில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் பேசும்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் ரகசியத்தை வெளியிட்டார். ரஜினிகாந்த் நடிக்கும் கேரக்டர் ஆதித்யா அருணாச்சலம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த கேரக்டரை உருவாக்கியது எப்படி என்பது குறித்து ஏஆர் முருகதாஸ் அவர்கள் கூறியபோது ’ஒவ்வொரு மனிதனுக்கும் தனது தந்தையும் தனது மகனும் முக்கியமானவர்கள். தந்தை மீது ஒரு மரியாதை இருக்கும், மகன் மீது அன்பு இருக்கும். எனவே எனது தந்தை அருணாசலம் பெயரையும் எனது மகன் ஆதித்யா பெயரையும் இணைத்து ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரை ரஜினிக்காக உருவாக்கி வைத்துள்ளேன் என்று கூறினார் 
 
மேலும் தலைவர் அவர்கள் வேற லெவல் என்றும் அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது என்றும் தல தளபதி ஆகியவர்களுடன் கூட ஒப்பிட முடியாது என்றும் ஏ ஆர் முருகதாஸ் கூறியபோது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கைதட்டல் ஒலி எழுந்தது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் ‘வார் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

சச்சின் பட ரி ரிலீஸில் ஏற்பட்ட திடீர் குழப்பம்… எப்போது ரிலீஸ்?

புஷ்பா 3 எப்போது உருவாகும்.. அப்டேட் கொடுத்த அல்லு அர்ஜுன்!

கைதி 2 படத்தில் இணையும் பிரபல தயாரிப்பு நிறுவனம்.. கார்த்தி கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments