Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியுடன் இருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (15:44 IST)
நடிகர் ரஜினியுடன் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் இருக்கும் பழையப் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

நடிகர் ரஜினி தனது சினிமா வாழ்க்கையில் பல திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து மேலே தூக்கிவிட்டுள்ளார். அப்படி அவரால் மேலேக் கொண்டுவரப்பட்டவர்களில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பல்துறை நிபுணராக இப்போது விளங்கும் ராகவா லாரன்ஸும் ஒருவர்.

ராகவா லாரன்ஸின் திறமையைப் பார்த்த ரஜினிதான் அவரை நடனக் கலைஞர்கள் யூனியனில் தனது பணத்தைக் கட்டி உறுப்பினராக சேர்த்துவிட்டர். அதன்பின் லாரன்ஸ் படிப்படியாக உயர்ந்து இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராகவும், தமிழில் மாஸ் கதாநாயகனாகவும் இருந்துவருகிறார்.

இந்நிலையில் இப்போது ரஜினியுடன் உழைப்பாளிப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் லாரன்ஸ் எடுத்துக் கொண்ட புகைப்படம்தான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அந்த புகைப்படத்தில் ரசிகர்கள் லாரன்ஸின் திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றிதான் அவர் இப்போது இருக்கும் இடம் எனப் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments